கடத்தல்காரர்களைப் பிடிக்கக் களமிறங்கிய ஸ்பைடர்மான்!
ஸ்பைடர்மான் (Spider-Man), கேப்டன் அமெரிக்கா (Captain America), தோர் (Thor), பிளாக் விடோ (Black Widow) சூப்பர் ஹீரோக்களும் மாறுவேடத்தில் வந்த சிறப்புக் காவல் படையினர் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்தனர்.
பெருவின் லீமா குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்தனர்.
அவர்கள் ஹாலோவீன் இசை நிகழ்ச்சிக்குச் சென்றதுபோல் நடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 3 ஆடவர்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்தனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களால் தங்கள் கண் முன் நடந்த காட்சியை முதலில் நம்ப முடியவில்லை.
அவர்கள் யாரோ கேலி செய்கிறார்கள் என்று நினைத்ததாகக் காவல்துறை சொன்னது.
மேலும் அவர்களிடமிருந்து கொக்கெய்ன் பசை கொண்ட 3,250 சிறிய பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.