இலங்கை கிரிக்கெட் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் (17.02.2024) நடைபெறவுள்ள முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
முதல் டி20 போட்டிக்கான போட்டி டிக்கெட்டுகளை கோரி கருமபீடங்களுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க கிரிக்கெட் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
ஐந்து வருடங்களின் பின்னர் தம்புள்ளையில் இடம்பெறும் போட்டியை காணும் சந்தர்ப்பம் இதுவே முதல் தடவை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் டி20 போட்டிகள் பெப்ரவரி 17, 19, 21 ஆகிய திகதிகளில் தம்புள்ளை மைதானத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.