இலங்கையில் அரிய நிகழ்வு; 6 குழந்தைகளை பிரசவித்த தாய்!
Pregnancy
Colombo Hospital
By Sulokshi
இலங்கையில் தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தாயொருவர் 6 குழந்தைகளை பிரசவித்த அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது.
சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள்.
பேராசிரியர் டிரான் டயஸின் பராமரிப்பில், அதிகாலை 12:16 முதல் 12:18 வரை இரண்டு நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன.
இந்நிலையில் தாய் மற்றும் பிறந்த ஆறு குழந்தைகளும் நல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US