டொராண்டாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்
டொராண்டோ நகரம் முழுவதும் பல சம்பவங்களில் மக்களை வீடியோ பதிவு செய்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் தொந்தரவு விசாரணையைத் தொடர்ந்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
2025 ஜூன் 8ஆம் திகதி டுன்டாஸ் மற்றும் டுப்ரீன் Street பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஒரு பெண், தன்னை ஒருவர் படம் பிடிப்பதை கவனித்ததாக கூறப்பட்டுள்ளது.
அவர் படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டபோது, அந்த நபர் எதிர்மறையாக நடந்துகொண்டதுடன் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், அங்கு இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் வெளியேறுமாறு கூறியபோதும் மறுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பெலிஸார் அழைக்கப்பட்டதும், குற்றச்சாட்டுக்குரிய நபர் அந்த இடத்தை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதே நபர் 2025 ஆகஸ்ட் 21ஆம் திகதி பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் ரி.ரி.சீ ஊழியரை அணுகி, அவரின் முகத்திற்கு அருகில் செல்போனை வைத்து படம் பிடித்ததுடன், அவரின் இனத்தை குறிவைத்து அவமதிப்பான கருத்துக்களையும் வெளியிட்டதாக போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த சம்பவத்திலும் காயம் எதுவும் பதிவாகவில்லை. மேலும், 2025 செப்டம்பர் 27ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் டேவிட் பீஸ் கட் சதுக்கத்தில் வரிசையில் நின்றிருந்த ஒருவரை படம் பிடித்தபோது, நிறுத்துமாறு கேட்டபோதும் அவர் மேலும் அருகில் வந்து எதிர்மறையாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது சம்பவமாக, 2025 மே 26ஆம் திகதி யோங் மற்றும் சுட்டர் வீதிப் பகுதியில் பணியில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை அணுகி, அவரது தோற்றம் குறித்து கருத்துக்கள் தெரிவித்து படம் பிடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதே அதிகாரியை 2025 அக்டோபர் 4ஆம் திகதி யோங் மற்றும் டுன்டாஸ் பகுதியில் மீண்டும் அணுகி, இதேபோன்ற கருத்துக்களை கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த அனைத்து சம்பவங்களிலும் உடல் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. 2025 டிசம்பர் 10ஆம் திகதி டொராண்டோவைச் சேர்ந்த 45 வயதுடைய மொஹமட் அஸ்கர் மொஹமட்-ரசிக் கைது செய்யப்பட்டு, நான்கு குற்றவியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.