இஸ்ரேலில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள்
ஜோர்தான் எல்லை வழியாக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இலங்கையர்கள் என உறுதிப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
ஆட்கடத்தல்காரர்களிடம் சுமார் 40 இலட்சம் ரூபாவை செலுத்தி இலங்கையர்கள் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு வருவதாகத் தெரிவித்த நிமல் பண்டார, இதனால் அவர்கள் மட்டுமன்றி தூதரகமும் சங்கடத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுவதாகவும், இலங்கையர்கள் தங்களின் கடவுச்சீட்டுகளை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
பணத்தை செலுத்தாவிடின் ஆண்களின் குடும்பங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும், பெண்ணாக இருந்தால் பல சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடும் எனவும் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்த காலத்தில் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழையும் போது அவர்கள் சுட்டுக் கொல்லப்படும் அபாயத்தையும், போரின் போது கைது செய்யப்படுவதையும் எதிர்கொள்ள நேரிடும்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.