பிரித்தானியா செல்ல கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் இலங்கையர்கள்
பிரித்தானியா செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்கள் தற்போது நெருக்கடியான சூழல் ஒன்றை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
VFS Global விசா வசதி சேவைகள் வழங்கும் நிறுவனம் மற்றும் இலங்கையில் உள்ள வங்கிகளின் பொறுப்பற்ற செயல்களினால் இந்த நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உக்ரைன் - ரஷ்ய போரால் உக்ரைன் பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் VFS Global நிறுவனம் பிரீமியம் விசா சேவைகளை (Premium visa service) இடை நிறுத்தியது. பிரீமியம் விசா சேவையானது, கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல், பிரித்தானியாக்கு வெளியே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு இப்போது மீண்டும் சேவைகளை தொடங்கியுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 30 வேலை நாட்களுக்குள் முடிவைப் பெற எதிர்பார்க்கலாம். மேலும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், நிலுவையில் உள்ள குடும்ப விசா விண்ணப்பத்துடன் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 15 முழு வேலை நாட்கள் முன்னுரிமை சேவையாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பணி மற்றும் வணிக வழிகளுக்கு பிரீமியம் சேவைகள் தற்போது பெரும்பாலான வெளிநாட்டு இடங்களில் சந்திப்பு அடிப்படையில் கிடைக்கின்றன.
பிரீமியம் மற்றும் சூப்பர் பிரீமியம் சேவைகள் வெளிநாடுகளில் சமர்ப்பிக்கப்படும் பெரும்பாலான விசிட் விசா விண்ணப்பங்களுக்கும் கிடைக்கின்றன. இந்த நிலையில் இந்த சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் பிரீமியம் சேவைகளுக்கான கட்டணம் சுமார் 269000 ரூபாய்க்கும் (738 டொலர்கள்) அதிகமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரீமியர் சேவைகளுக்கான கட்டணத்தை செலுத்துவதில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை வங்கிகளில் பணம் செலுத்துவதற்கான தொகை மட்டுப்படுத்தல் மற்றும் VFS Global விசா வசதி சேவையின் இணையத்தளத்தில் பணம் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்தும் செலுத்த முடியவில்லை எனவும் பிரித்தானியாவில் இருந்தும் செலுத்த முடியவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்த பலர் மற்றும் பிரித்தானியாவில் பிள்ளைகளிடம் செல்ல முயற்சிக்கும் பெற்றோர்கள் பலர் இந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். உடனடியாக தங்கள் கணவன் அல்லது மனைவியை அழைத்துக் கொள்ள முயற்சிக்கும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் Prority Visa சேவைகளை அதிகம் பயன்படுத்தும் நிலையில் இவ்வாறான நெருக்கடியால் பாதிக்கபப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர்களின் உறவினர்கள் தங்கள் பணத்தை செலுத்தும் அடையின் ஊடாக உறவினர்களுக்கு பணம் செலுத்த பல முறை முயற்சித்துள்ளனர். எனினும் கட்டண அதிகரிப்பையடுத்து இலங்கையில் வங்கிகள் கட்டுப்பாடுகள் காரணமாக உறவினர்களால் பணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளது.
இது தொடர்பில் VFS Global விசா வசதி சேவைகள் வழங்கும் நிறுவனத்திடம் வினவிய போது அது வங்கியில் உள்ள சிக்கல் தங்கள் நிறுவனத்திற்கும் இந்த பிரச்சினைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மிகவும் பொறுப்பற்ற முறையில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் பிரீமியம் சேவை கட்டண மாற்றம் மற்றும் வங்கிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் விடுக்காமையினால் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.
வங்கிகள் இவ்வாறு தன்மை காத்திருக்க வைப்பதற்கு பதிலாக கட்டணத்தை செலுத்த மாற்று வழிகளை கண்டுபிடித்தால் தங்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைவடையும் என பாதிகக்கப்பட்ட பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.