இலங்கையில் ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ள நிலையில், அவர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விமான நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்ததாக சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் கூறினார்.
மேலும், குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், அவர் எவ்வாறு வெளியேறினார் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.