மார்க்கம் துப்பாக்கி சூட்டில் இலங்கை தமிழ் யுவதி உயிரிழப்பு
கனடாவின் மார்க்காமில் வசித்து வந்த 20 வயதுடைய யாழ்ப்பாண யுவதி ஒருவர் நேற்று முன்தினம் (09) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
ரகுதாஸ் நிலாக்ஷி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இரண்டு தடவைகள் துப்பாக்கி சூடு
யாழ்ப்பாணம் கோண்டாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற இந்த பெண் இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அந்த வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த பெண்ணுடன் வசித்து வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரிகள் வீட்டைக் காத்துக்கொண்டிருந்த நாயையும் சுட்டுக் கொன்றதாகக் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நால்வர் கெப் ரக வாகனத்தில் தப்பிச் செல்வது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக கனேடிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மார்க்கம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.