நார்தாம்ப்டன் பூங்காவில் கத்திகுத்து; இளைஞன் பலி ... சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில்
இங்கிலாந்தில் நார்தாம்ப்டனில் உள்ள ஒரு ஸ்கேட் பூங்காவில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நார்த்தாம்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் , பதின்ம வயது சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது
சம்பவத்தில் உயிரிழந்தவர் 20 வயதுடையவர் எனவும், , கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான சிறுவன் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரையர் ஹில் பகுதியில் புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நார்த்தாம்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நார்தாம்ப்டனைச் சேர்ந்த இரண்டு பதின்ம வயது சிறுவர்களும், ஆணொருவம், பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான அனைவரும் தற்சமயம் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நார்தாம்ப்டன் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியங்கள் அல்லது சாட்சியங்கள் இருந்தால் முன்வந்து வழங்குமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.