பாலத்தில் நின்று செல்பி எடுத்த நபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Shankar
Report this article
சென்னை, அண்ணாசதுக்கதின் அருகாமையில் உள்ள நேப்பியர் பாலத்தில் நின்று செல்பி எடுத்த போது கூவத்தில் விழுந்த ஐடி நிறுவன அதிகாரியை பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர் .
குறித்த நபர் அண்ணாசதுக்கம் அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் நின்று தனது கையடக்கதொலைபேசியில் செல்பி எடுத்தவேளை எதிர்பாராதவகையில் வீசிய காற்றின் காரணமாக நிலைதடுமாறிய குறித்த நபர் நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் விழுந்து சகதியில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளார் .
சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அண்ணாசதுக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, சிறப்பு எஸ்ஐ குமார், பாலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சேற்றில் சிக்கிய மூர்த்தி எனும் குறித்த நபரை மீட்க முயன்றனர்.
இருப்பினும் அவரை மீட்க முடியவில்லை.
பின்னர் தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மிதவை மூலம் கயிறு கட்டி மூர்த்தியை உயிருடன் மீட்டுள்ளனர்.