கனடாவில் i Phone இன் முக்கிய செற்பாடுகளில் பங்குகொள்ளும் ஈழத்தமிழன்!!
அகதிகளாக உலகம் முழுவதும் அலைந்து திரிந்த ஈழத்தமிழினம் இன்று இந்தப் பூமிப்பந்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக எழுந்து நிற்க ஆரம்பித்துவருகின்றது.
வர்த்தகத்துறையில் உலகின் பல முக்கிய நகரங்களிலும் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது.
உலகத் தமிழ் இனத்தை ஒன்றினைத்து 'உலகத் தமிழ் பொதுநலச் சமூகம்'(Global Tamil Commonwealth) ஒன்றை உருவாக்கும் நெடும் பயனதின் தொடக்கப்புள்ளியான 70 நாடுகளின் தமிழ் தொழிலதிபர்களும், திறனாளர்களும், ஆர்வலர்களும் ஒன்றுகூடும் 'லண்டன் மாநாடு' இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெற இருக்கின்றது.
அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் தொழிலதிபர்களுள் ஒருவர்தான் கனடாவைச் சேர்ந்த திரு.ஸ்டான் முத்துலிங்கம் அவர்கள்.
31 வருடங்களாக கனடாவில் தொலைத்தொடர்புத்துறை சார்ந்த வர்த்தகத்தை மேற்கொண்டுவருகின்ற ஸ்டான் முத்துலிங்கம் என்ற ஈழத் தமிழ் தொழிலதிபர், கனடாலில் IPhone தயாரிப்பில் தனது நிறுவனம் வகித்து வருகின்ற வகிபாகம் பற்றி பகிர்ந்துகொள்ளுகின்ற விடயங்கள் இதோ: