கனடாவில் குடும்பங்களின் கடன் விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்
கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால், இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செலவிடக்கூடிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், குடும்பக் கடன் சந்தைக் கடன் பருவகால சீரமைப்பின்படி முதல் காலாண்டில் 178.6 சதவீதமாக இருந்தது, இது இரண்டாவது காலாண்டில் 176.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கனடிய குடும்பங்கள் செலவிடக்கூடிய ஒவ்வொரு 1 டொலர் வருமானத்திற்கும் சராசரியாக 1.76 டொலர் கடன் வைத்துள்ளனர்.

வருமானத்தில் அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான வீதம் 14.68 சதவீதத்திலிருந்து 14.52 சதவீதமாகச் சரிந்துள்ளது.
நுகர்வோர் கடன், வீட்டு அடமானக் கடன் மற்றும் அடமானம் அல்லாத கடன்கள் அடங்கிய மொத்த குடும்பக் கடன் வாங்கும் அளவு, முதல் காலாண்டில் 34.4 பில்லியன் டொலராக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 29.4 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
அடமானக் கடன் வாங்கும் வீதம் 19.4 பில்லியன் டொலராக சரிந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும். நுகர்வோர் கடன் உட்பட அடமானம் அல்லாத கடன்கள் வாங்கும் அளவு 10.0 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.