கனடாவின் இந்தப் பகுதியில் கடும் பனிப்புயல் – அவசர நிலை அறிவிப்பு
கனடாவின் மானிடோபா மாகாணத்தில் உள்ள நிசிசவாயாசிக் கிரி நேஷன் பகுதியில் பனிப் புயல் காரணமாக அவசர நிலை (State of Emergency) அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 சென்டிமீட்டர் பனி பொழிவு நிலைமை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 1:10 மணியிலிருந்து பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக பல வீடுகள் வெப்பமின்றி இருந்ததால், மூத்த குடிமக்கள் மற்றும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
NCN சமூகத்தினர் தற்போது மானிடோபா ஹைட்ரோ (Manitoba Hydro) நிறுவனத்துடன் இணைந்து மின் விநியோகம் மீண்டும் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மானிடோபாவின் பல பகுதிகளில், குறிப்பாக சான் கிளாரா (San Clara) மற்றும் ஸ்னோ லேக் (Snow Lake) பகுதிகளில், இந்த பனிப்புயல் காரணமாக மரங்கள் விழுதல், மின்கம்பிகள் சேதமடைதல் உள்ளிட்ட கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.