துப்பாக்கியுடன் வீதியில் திரிந்த நபர்; ரொறன்ரோ பொலிஸார் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
ரொறன்ரோ மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வீதியில் மற்றொருவரை துரத்திச் சென்றதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நோர்த் யோர்க்கின் கிலி மற்றும் வில்சன் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறெனினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்பினத்தவரான ஒருவர் கையில் துப்பாக்கியுடன் திரிந்துள்ளதாக பொலிஸார் குறித்த நபரின் ஆள் அடையாள விபரங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அருகாமையில் காணப்படும் மெடோனா கத்தோலிக்க பாடசாலை முடக்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.