இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; குவிக்கப்பட்ட பொலிஸார்
இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று அதிகாலை மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, அந்நகரில் வேன் ஒன்றினால் மோதப்பட்ட மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நோட்டிங்ஹாம் நகரம் முடக்கப்பட்டுள்ளதுடன் அந்நகர வீதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல வீதிகள் முடக்கம்
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 மணியளவில் இல்கேஸ்டன் வீதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு இருவரின் சடலங்களை பொலிஸார் கண்டனர். மெக்தலா வீதியிலும் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின், மில்டன் வீதிக்க பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில் அங்கு வேறு மூவரை வேன் ஒன்று மோதி காயப்படுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என தாம் கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவங்களை தொடர்ந்து நோட்டிங்ஹாம் நகரின் பல வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இல்கேஸ்டன் வீதியில் ஓர் இளைஞனும் யுவதிம் கத்தியால் குத்தப்பட்டதை தான் கண்டதாக தன்னை அடையாளம் காட்டவிரும்பாத ஒருவர் கூறியுள்ளார்,