இலங்கையில் திருடுபோன 20 பவுண் நகை: கைது செய்யப்பட்ட மூவர்
முல்லைத்தீவு நகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் மாதம் இரவு 20 பவுண் நகைகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி, நெல்லியடி, ஊர்காவற்றுறை பிரதேசங்களைச் சேர்ந்த மூவர் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவைக் கண்காணிக்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்தார்.