Pedro புயல்; பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!
பெட்ரோ (Pedro) என பெயரிடப்பட்ட புயல் தாக்கமானது இன்றும் நாளையும் பிரித்தானியாவின் பல பகுதிகளில் மழை மற்றும் பனி நிலைமையினைக் கொண்டுவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோ என்ற பெயரானது பிரான்ஸ் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வானிலை நிறுவனம் Meteo France இதனால் வைக்கப்பட்டதுடன், அங்கு புயல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், புயல் தாக்கத்தினால் இங்கிலாந்தில் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தற்போது தெற்கு இங்கிலாந்தில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.
வேல்ஸ் மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸுக்கு மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பெட்ரோ புயலால் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.