பிரேசிலை புரட்டி போட்ட புயல் மழை... உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
பிரேசிலை புரட்டி போட்ட புயல் மழைக்கு இதுவரை 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், பொதுமக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கியுள்ள நிலையில் இடிந்த வீடுகளில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.
மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
மீட்பு படையினர் இடிபாடுகளில் இருந்து 16 மணித்தியாலத்திற்கு பிறகு ஒரு சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
ஆனால், அந்த சிறுமியின் தந்தை அவர் அருகிலேயே இறந்து கிடந்தார். மகளை காப்பாற்றிவிட்டு அவர் உயிர் இழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த புயலில் மிமோசா டோவுல் பகுதியில் தான் பலர் உயிரிழந்துள்ளனர்.