ரஷ்யாவின் கொடூர தாக்குதலில் கர்ப்பிணி பெண் மற்றும் குழந்தைக்கு நேர்ந்த கதி

Death Russia Baby Girl Ukraine War Pregnant
By Independent Writer Mar 14, 2022 10:19 AM GMT
Report

ரஷ்யாவின் கொடூர தாக்குதலில் கர்ப்பிணி பெண்மணி, அடிவயிற்றின் கீழ் இரத்தம் வழிய ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் படங்கள் காண்போரின் கண்களை குளமாக்கி உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 19-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷ்ய படைகள் கொடூர தாக்குதலை தொடுத்துள்ளன.

இந்நிலையில், உக்ரைனை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தக்குதலில் அவரும் அவருடைய குழந்தையும் உயிரிழந்தனர்.

அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு செல்லும் புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது. மேலும், உக்ரைனில் நிகழ்ந்துவரும் கொடூரங்களில் உச்சகட்ட கொடூர நிகழ்வாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஊடக பத்திரிகையாளர் ஒருவர் நிகழ்விடத்திற்கு சென்று இந்த கொடூரத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளார். அதில் அந்த கர்ப்பிணி பெண்மணி, அடிவயிற்றின் கீழ் இரத்தம் வழிய ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் படங்கள் காண்போரின் கண்களை குளமாக்கி உள்ளது.

இந்த தாகுதலில் அவருடைய வயிற்றில் இருக்கும் சிசு இறந்துவிடும் என்பதை அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்த உடனே, அந்த பெண் “என்னையும் உடனடியாக கொன்றுவிடுங்கள்” என்று அழுது கெஞ்சி உள்ளார்.

அந்த பெண்ணின் இடுப்பு பகுதி நசுக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்ப பையில் இருந்து சிசு வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் அந்த சிசு உயிருடன் இல்லை.

அதன்பின் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் 30 நிமிடங்களில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்த ரஷ்ய அதிகாரிகள், மகப்பேறு மருத்துவமனையை உக்ரேனிய பிரிவினைவாதிகள் ஒரு தளமாகப் பயன்படுத்தியதாகவும், நோயாளிகள் அல்லது மருத்துவர்கள் போன்றோர் யாரும் மருத்துவமனை கட்டிடத்ததின் உள்ளே இல்லை என்றனர்.

லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த படங்களை "போலி செய்தி" என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US