அன்பை பரிமாற ஆள் வேண்டுமா? சீனாவில் வைரலாகும் வினோதமான கலாச்சாரம்
சீனாவில் தற்போது விநோத கலாச்சாரம் ஒன்று வைரலாகியுள்ளது. காசு கொடுத்து அன்பை சீனப் பெண்கள் வழங்கி வருகின்றனர்.
அதாவது இளம்பெண்களை முத்தமிட்டு கொள்ளலாம், கட்டிப்பிடித்து கொள்ளலாம், திரைப்படம் பார்க்க அழைத்து செல்லலாம், வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொள்ளலாம், ஒன்றாக மது அருந்தவும் அழைத்து செல்லலாம் என்று அந்த ரேட் கார்டுகளில் எழுதப்பட்டு உள்ளதோடு, அதற்கென தனித்தனியாக கட்டணமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டணங்கள் தனித்தனியே நிர்ணயம்
ஷென்சென் மற்றும் அதனை சுற்றிய நகரங்களின் தெருக்களின் ஓரங்களில் இளம்பெண்கள் வரிசையாக அமர்ந்துள்ளனர். அவர்களின் முன்பு பல்வேறு விதமான ‛ரேட் கார்டுகள்' வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி இளம்பெண்ணுக்கு முத்தமிட அல்லது இளம்பெண்ணிடம் இருந்து முத்தம் பெற கட்டணம் , தியேட்டரில் ஒன்றாக சேர்ந்து படம் பார்க்க , வீட்டு வேலைகளை செய்வதற்கு , ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்த என கட்டணங்கள் தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை இதில் பெண்களுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள அனுமதி இல்லை. அதாவது தனிமையில் தவிக்கும் நபர்களுக்கு துணையாக இருந்து அன்பை பரிமாறும் வகையில்தான் இந்த சேவையை செய்வதாக இளம்பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. சீனாவில் இதுபோன்ற வினோதமான கலாச்சாரம் வைரலாகி வருகிறது.
திருமணத்துக்கு பெண் கிடைக்காத, திருமண உறவில் இணைய விரும்பாதவர்கள் இளம்பெண்களுடன் அன்பை பரிமாறிக்கொள்ள இது வரப்பிரசாதம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை பணம் சம்பாதிப்பதற்காக பெண்கள் இந்த அளவுக்கு இறங்கி செல்வதா? ஒரு சாரார் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.