பிரான்ஸில் கடுமையாகும் சட்டம்!
பிரான்ஸில் போக்குவரத்து சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு வாகனத்தைச் செலுத்தினால் சாரதியின் ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக இரத்துச் செய்யப்படும் முறை ஒன்றை உள்துறை அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.
அண்மையில் நகைச்சுவை நடிகர் Pierre Palmade இன் விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை Gérald Darmanin ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள ‘மது போதையில் வாகனம் செலுத்தினால் 6 புள்ளிகள் குறைக்கப்படும் எனும் தண்டனையை 12 புள்ளிகள் வெட்டப்பட்டு அல்லது நிரந்தரமாக ஓட்டுனர் உரிமத்தை இரத்துச் செய்வது போட்டு தண்டனையை கடுமையாக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரான்சில் 800,000 வீதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 16 சதவீதமானவர்கள் போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு வாகனம் செலுத்தியதாக தெரியவந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.