டிரம்ப் பதவியேற்றபின் குடியேற்றவாசிகளுக்கு மிகக்கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகள் குறித்து மிகக்கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
டிரம்பின் குழுவினர் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
உத்தரவுகளை உருவாக்கிவரும் டிரம்பின் குழுவினர்
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மிகக்கடுமையான குடியேற்ற உத்தரவுகளை டிரம்பின் குழுவினர் உருவாக்கிவருகின்றனர்.
இந்த உத்தரவுகள் அமெரிக்க மக்களிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விடயமறிந்த இரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் குடியேற்றகொள்கையில் பாரிய மாற்றத்தை கொண்டிருக்கும் .
மேலும் அமெரிக்காவில் ஏற்கனவே வசிக்கும் அமெரிக்கர்கள் அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் குடியேற்றவாசிகளை இலக்குவைத்து அமெரிக்க குடிவரவுதுறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்,பென்டகனின் வளங்கள் அமெரிக்காவின் தென்பகுதி எல்லைக்கு அனுப்பப்படும், அமெரிக்க எல்லைக்குள் நுழைய தகுதியானவர்கள் யார் என்பது குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
அமெரிக்க அதிபரானதன் பின்னர் டிரம்ப் , ஜோபைடன் காலத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைகளை கைவிடுவார்.
குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் வெளியாகும் என்பதுடன் ,கைதுகள் இடம்பெறுவது குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.