கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நியூசிலாந்தில் போராட்டம்
உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே வழி என பல நாடுகள் கருதுவதனால் , மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.
அதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிவதுடன் . அவர்கள் கட்டாய தடுப்பூசி என்பது தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் பல நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் வெலிங்டனில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று நாடாளுமன்றம் முன்பு போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.