ஜப்பானில் தீவிரமாக பரவி வரும் அரியவகை நோய்! இரண்டு நாளில் மரணம் நிச்சயம்
ஜப்பானில் சமீப நாட்களாக அரிய வகை நோய் தொற்று ஒன்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி.எஸ்.எஸ். எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோய் பரவி வருவதாக ஜப்பான் நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் (2024) மாத்திரம் குறித்த நோயினால் 30 சதவீதமானோர் உயிரிழப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அரியவகை நோயினால் இதுவரையில் பாதிக்கப்பட்ட 977 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த நோய் உடல் பகுதியை சாப்பிட கூடிய பாக்டீரியாவால் ஏற்பட கூடியது. மனிதர்களை 48 மணித்தியாலத்தில் கொல்லும் சக்தி படைத்ததுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.