ராஜபக்ச குடும்பத்திற்கு இப்படி ஒரு பரிதாப நிலை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் சிலர் நாட்டை விட்டு வெளியேற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி அவர்கள் தங்கள் பயணத்திற்காக மத்தள விமான நிலையத்தை பயன்படுத்தவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி கோட்டபாய மற்றும் பஷில் ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மத்தள விமான நிலையத்தின் ஊடாக தனி ஜெட் விமானத்தில் மூலம் நாட்டை விட்டுச் வெளியேற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை  இன்று அதிகாலை பஷில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக  செல்ல முயற்சித்தபோது  விமான நிலைய அதிகாரிகளால் அவரது முயற்சி முறியடிக்கபட்டிருந்தது.
இந்நிலையில்  ராஜபக்சர்கள்  மத்தள விமான நிலையம்  ஊடாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக  தெரிவிக்கப்படுகின்றது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        