சீனா தொழிற்சாலைகளிற்கு இப்படி ஒரு நிலை!
பசுமை ஒலிம்பிக் என்ற இலக்குடன் களமிறங்கிய சீனா தொழிற்சாலைகளின் புகை மூட்டத்தால் தவித்து வருகின்றது. பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தொழிற்சாலைகளின் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த, சீன அரசு போராடி வருகிறது.
அதேவேளை பனிச்சறுக்குப் போட்டிக்காக செயற்கை பனிப்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், உள்ளூரில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலும் நிலவுகிறது.
பசுமை ஒலிம்பிக் என்ற இலக்குடன் களமிறங்கிய சீனா, குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளை 2015-ல் தொடங்கியபோது, பீஜிங் அருகேயுள்ள ஹெபை மாகாணத்தில் இயங்கி வந்த ஏராளமான தொழிற்சாலைகளை வேறிடங்களுக்கு மாற்றியது.
மேலும், அங்கு ஏராளமான மரங்களை நட்டு சுற்றுச்சூழலையும் மேம்படுத்தியது. எனினும், தற்போது புகைமூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் குளிர்கால ஒலிம்பிக் முடியும் வரை, பீஜிங் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை மூட சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.