சீனாவில் குற்றவாளிகளுக்கு இப்படி ஒரு நிலை!
தெற்கு சீனாவில் குற்றவாளிகள் என்று கூறப்படும் நான்கு பேரை பொது வெளியில் அவமானப்படுத்தி, பொலிஸார் அவர்களை வீதிகளில் அணிவகுத்து அழைத்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
கொவிட் காரணமாக பெரும்பாலும் சீல் வைக்கப்பட்டுள்ள சீனாவின் எல்லை பகுதியில் சட்டவிரோதமாக ஆட்களை அழைத்து சென்றதாக குறித்த நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் குவாங்சி மாகாணத்தில் உள்ள ஜிங்சி நகரத்தின் வீதிகளில் பாதுகாப்பு கவச உடை அணிந்து அணிவகுத்துச் சென்றனர். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும், கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதேவேளை இந்த ஒழுங்கு நடவடிக்கை எல்லை தொடர்பான குற்றங்களைத் தடுத்துள்ளது என்றும், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் இணங்குவதை ஊக்குவித்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.