ஒரே ஒரு கையெழுத்தால் கோடீஸ்வரர்களான கூகுள் ஊழியர்கள் ; மாஸ் காட்டிய சுந்தர் பிச்சை
கிளவுட் செக்யூரிட்டி பிரிவில் வலுப்படுத்துவதற்காக கூகுள் நிறுவனம் விஸ் (WIZ) என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.
இதற்காக 32 பில்லியன் அமெரிக்க டாலர்களை கூகுள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. வரலாற்றில் இல்லாத வகையில் கூகுள் நிறுவனம் மொத்தமாக 32 பில்லியன் டொலர்களை ரொக்கமாக கொடுத்து இந்த நிறுவனத்தை வாங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம்
விஸ் என்பது இஸ்ரேலை தலைமையிடமாக கொண்டு 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிளவுட் செக்யூரிட்டி சாப்ட்வேர் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் 1700 ஊழியர்கள் பணி புரியும் நிலையில் கூகுள் நிறுவனம் இந்த விஸ் நிறுவனத்தை 32 பில்லியன் டொலர்கள் கொடுத்து கையகப்படுத்தி இருக்கிறது.
அதுமட்டுமின்றி தாங்கள் கையகப்படுத்திய பிறகு விஸ் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்கள் தொடர்ந்து அதிலேயே இருந்து வேலை செய்வதை உறுதிப்படுத்துவதற்காக 2.8 மில்லியன் டொலர்களை ஒவ்வொரு ஊழியர்களுக்கும் வழங்கவுள்ளது.
விஸ் நிறுவனத்திற்கு கொடுத்த விலையில் கணிசமான தொகையை நிறுவன ஊழியர்களும் பெற இருக்கின்றனர். இதன் மூலம் அமெரிக்காவில் புதிதாக 1700 பணக்காரர்கள் ஒரே நாளில் உருவாகி இருக்கின்றனர்.