நாசாவிலிருந்து ஓய்வு பெறும் சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த 27 ஆண்டுகளாக நாசாவில் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ், , மூன்று வெவ்வேறு விண்வெளிப் பயணங்கள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 608 நாட்களைக் கழித்துள்ளார்.

2006-ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தைத் தொடங்கிய சுனிதா, விண்வெளியில் நீண்ட நேரம் நடந்த பெண் என்ற சாதனையையும் ஒரு காலத்தில் படைத்திருந்தார்.
அவரது ஓய்வு மிகவும் சவாலான ஒரு பயணத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜூன் மாதம் 8 நாட்கள் பயணமாகச் சென்ற அவர், விண்கலக் கோளாறு காரணமாக 9 மாதங்கள் அங்கேயே சிக்கியிருந்தார்.
அந்த இக்கட்டான சூழலிலும் விண்வெளி நிலையத்தின் கமாண்டராகப் பொறுப்பேற்று, துணிச்சலுடன் செயற்பட்டு 2025 மார்ச் மாதம் பூமி திரும்பினார். அதேவேளை தற்போது 60 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ் தனது ஓய்வுக்குப் பின் இந்தியா வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் , ஓய்வு விண்வெளி வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் நிறைவாகப் பார்க்கப்படுகிறது.