சிஎஸ்கே ரசிகர்களுக்கு டோனிக் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!
சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து, மெகா ஏலத்திற்காக தோனி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். பெங்களூரில் வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சென்னை வந்து தனது திட்ட பணிகளை தொடங்கியுள்ளார்.
அந்த அணி இந்த முறை சீனியர் வீரர்களின் பக்கம் செல்கிறதா? அல்லது இளம் வீரர்களின் மீது தனது கவனத்தை வைக்கிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது. ஏனென்றால் சமீப காலமாக கேப்டன் எம்.எஸ்.தோனி, சிஎஸ்கே எதிர்காலத்தை மனதில் வைத்து, இளம் வீரர்களை எடுக்க தான் அதிகம் விரும்புகிறார்.
இந்நிலையில் அதற்கேற்றார்போல் மெகா ஏலத்தின் போது தோனியும் உடனிருந்து வீரர்களை ஏலம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பேட்டியளித்திருந்த சிஎஸ்கே மூத்த அதிகாரி ஒருவர், ஏலத்தின் போது பங்குபெற வேண்டும் என தோனியிடம் கோரியுள்ளதாகவும், விரைவில் அவர் முடிவை தெரிவிப்பார் என்றும் கூறப்பட்டது.
அந்தவகையில் தோனி, நிச்சயம் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக உட்காருவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் முடிவுகள் எப்போதுமே சிறப்பாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனவே அவர் ஏலம் எடுக்கவுள்ள வீரர்கள் அனைவரையுமே மற்ற அணிகளும் குறிவைக்கும் என்பதால் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் தோனி ஏற்கனவே தமிழக வீரர் ஷாருக்கான், பூட்டான் ஆல்ரவுண்டர் மிக்யோ டோர்ஜி உள்ளிட்ட சில இளம் வீரர்களின் பெயர்களை தனது மனதில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் உள்ளிட்ட வீரர்களையும் மீண்டும் சிஎஸ்கேவுக்கே கொண்டு வரவும் தீவிரமாக உள்ளனர்.

