கனடாவில் துப்பாக்கி குண்டுக்கு பலியான கல்லூரி மாணவி: குடும்பத்தினரின் உருக்கமான கோரிக்கை
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவி தொடர்பில் குடும்பத்தினர் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
குறித்த வழக்கில் ஓராண்டுக்கு பின்னரும் இதுவரை துப்புத்துலங்காமல் பொலிசார் திணறி வருகின்றனர். கடந்த 2021 பிப்ரவரி 4ம் திகதி சர்ரே பகுதியில் 23 வயதான ஷனா ஹாரிஸ் என்ற கல்லூரி மாணவி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையிலும், பொலிசாரால் இதுவரை இந்த வழக்கு தொடர்பில் கைது நடவடிக்கை ஏதையும் முன்னெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவி ஹாரிஸ் கண்டிப்பாக அவர்களின் இலக்காக இருந்திருக்க முடியாது என தெரிவித்துள்ள பொலிசார், ஹாரிஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் கண்டிப்பாக காயபட்டிருப்பார் எனவும், ஆனால் அவர் பிழைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு மிக விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றே நம்புவதாகவும், விசாரணை அதிகாரிகள் மீது நம்பிக்கை இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஷனா ஹாரிஸ் பெயரில் தேவையானோருக்கு உதவித்தொகை அளிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,
அவரது நினைவாக இது தொடரப்படும் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, ஷனாவின் நீண்ட நாள் ஆசை அதுவாக இருந்து என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.