கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்டவரை தேடும் பொலிஸார்
கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் பாலியல் துஷ்பயோக சம்பவங்களை மேற்கொண்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த சந்தேக நபர், சிலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் பெண்கள் ஆடை மாற்றும் பகுதிக்கு அத்துமீறி பிரவேசித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் துஷ்பியோக சம்பவங்களை மேற்கொண்டு குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கறுப்பினத்தவரான இந்த சந்தேகநபர் 20 முதல் 30 வயது வரையிலானவர் எனவும் 5.8 அங்குலம் உயரமானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு உடன் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.