டொரன்டோ பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏசி இயங்காத காரணத்தினால் ஏற்பட்ட விபரீதம்
டொரன்டோ முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏசி அல்லது காற்று சீராக்கி இயங்காத காரணத்தினால் 96 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிக வியர்வை காரணமாக தமது தாய் உயிரிழந்து உள்ளதாக மூதாட்டியின் மகள் தெரிவித்துள்ளார்.
இந்த கோடை காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இது என தெரிவிக்கப்படுகின்றது.
வெப்பம் காரணமாக இருதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த மூதாட்டி உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக காற்று சீராக்கி இயங்கவில்லை என பராமரிப்பு நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் சில நாட்களாகவே காற்று சீராக்கி இயங்கவில்லை என குறித்த மூதாட்டியின் தாய் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான பராமரிப்பு நிலையங்களில் காற்று சீராக்கிகள் பொருத்தப்பட்டு முழு நேரமும் இயங்க செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் நகர நிர்வாகத்தினால் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த பராமரிப்பு நிலையத்தில் காற்று சீராக்கி இயங்காத காரணத்தினால் 96 மூதாட்டி அதிக வெப்பத்தை தாங்க முடியாது உயிரிழந்து உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.