113 ஆண்டு பழமையான தேவாலயத்தை இடம் மாற்றும் சுவீடன்
சுவீடனின் கிருனா (Kiruna) நகரில் 113 ஆண்டு பழமையான தேவாலயத்தை அங்குள்ள அரசாங்கம் முழுமையாக வேறு இடத்துக்கு மாற்றுகிறது.
உருளும் மேடையின் மீது தேவாலயம் தூக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மேடை மணிக்கு 500 மீட்டர் வேகத்தில் நகர்கிறது. தற்போதுள்ள இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்கு மாற்றப்படுகிறது.
தேவாலயம். நூற்றாண்டு பழமையான எஃகுச் சுரங்கம் அருகே இருக்கும் பகுதியில் பிளவுகள் ஏற்பட்டதால் தேவாலயம் தொடர்ந்து அங்கிருப்பது பாதுகாப்பல்ல என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தேவாலய இடமாற்றம் ஒரு பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது. உள்ளூர்வாசிகளின் மனத்தில் தேவாலயம் முக்கியமான இடம் பிடித்திருப்பதால் அதை அவர்கள் பேணிக்காக்க விரும்புகிறார்கள்.
அதேவேளை சுவீடனின் தொலைக்காட்சிகள் தேவாலயம் இடம் மாற்றப்படுவதை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்பும் என்றும் கூறப்படுகின்றது.