இளம் பெண்ணின் உயிரை பறித்த இனிப்பு; லண்டன் பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!
லண்டனில் கஞ்சா இனிப்பு என்று நம்பி சாப்பிட்ட 23 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 23 வயதான குறித்த பெண் தனது தொலைபேசியில் உள்ள செயலி மூலம் gummies வாங்கியுள்ளார்.
குறித்த பொருள் மார்ச் 29ம் திகதி இல்ஃபோர்டில் உள்ள சவுத் பார்க் டிரைவில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டன. Trrlli Peachie Os என்ற பெயரில் ஒரு பொட்டலத்தில் இனிப்புகள் வந்தன. அந்த இனிப்புக்களை உயிரிழந்த யுவதி மற்றும் 21 வயது நண்பர் இருவரும் தலா ஒன்றை சாப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் நோய்வாய்ப்பட்ட நிலையில் கிழக்கு லண்டன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், 23 வயதான அந்த பெண் சனிக்கிழமை இறந்தார். எனினும் உயிரிழந்தவரின் அவரது அடையாளம் தற்போது வெளியிடப்படவில்லை என்று மெட் தெரிவித்துள்ளது.
21 வயதான அவர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இனிப்புகள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அந்த இனிப்புக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட Mets East Area Basic Command Unit இன் தலைமை கண்காணிப்பாளர் ஸ்டூவர்ட் பெல், தயவுசெய்து இந்த பொருட்களை வாங்கவோ அல்லது உட்கொள்ளவோ வேண்டாம்” என அறிவுறுத்தியுறுத்தியுள்ளார்.