கடலில் டால்பின்களை நோக்கி நீந்திய இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட எதிர்பாராத துயரம்
மேற்கு அவுஸ்திரேலியாவில் கடலில் நீச்சலடித்த இளம்பெண் ஒருவர் சுறா தாக்கியதில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 வயதேயான அவர் கடுமையான காயங்களுடன் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து சேரும் முன்னர், குறித்த இளம்பெண் காயங்கள் காரணமாக இறந்துள்ளார்.
நண்பர்கள் வட்டத்தில் இருந்து தவறிய நிலையிலேயே அவர் சுறாவுக்கு இலக்கானதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். படகில் சென்ற போது டோல்பின்களை காண நேர்ந்த அவர், அந்த ஆவேசத்தில் கடலில் குதித்ததாகவும், ஆனால் சுறா ஒன்று அப்பகுதியில் வட்டமிட்டிருந்ததை அவர் கவனிக்க தவறியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் உறவினர்கள் எவரும் அங்கே இல்லை எனவும், நண்பர்கள் மட்டுமே உடனிருந்ததாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, குறிப்பிட்ட பகுதியில் 1923க்கு பின்னர் சுறா தாக்குவது இதுவே முதல்முறை எனவும்,
கடைசியாக 13 வயது சிறுவன் சுறா தாக்கி கொல்லப்பட்ட பின்னர், சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.