சுவிட்சர்லாந்தில் பலரின் உயிரை பறித்த தீப்பரவல் ; மெழுகுவர்த்தி ,ஷாம்பெயின் போத்தல்கள் காரணம்
2026 புத்தாண்டு நாளில் சுவிட்சர்லாந்தில் பாரிய தீப்பரவலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்துக்கு மெழுகுவர்த்தி மற்றும் ஷாம்பெயின் போத்தல்கள் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ
புத்தாண்டு கொண்டாத்தில் மக்கள் ஈடுபட்ட நிலையில் சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவிலுள்ள உணவகத்துடன் இணைந்த மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் பலியானதுடன் , 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் விபத்து நடந்த நேரத்தில் 400க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிற நிலையில் இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசம் சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் நகரிலிருந்து சுமார் இரண்டு மணிநேரப் பயண தூரத்தில், ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மத்தியில் இந்த ஆடம்பர பனிச்சறுக்கு சுற்றுலாத் தளம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.