யாழில் புலம் பெயர் சுவிஸ் வாழ் நபர் கொடூரமாக கொலை

Jaffna Tamil diaspora Switzerland Crime
By Sulokshi May 18, 2026 05:58 AM GMT
Report

  சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற  நபர்  ஒருவர்   கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த நபரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

யாழில் புலம் பெயர் சுவிஸ் வாழ் நபர் கொடூரமாக கொலை | Swiss Based Expatriate Brutally Murdered In Jaffna

 வீட்டிலிருந்து கடுமையான தூர்நாற்றம்

நீண்ட காலமாகத்  சுவிஸ் நாட்டில் வசித்து வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக விடுமுறையைக் கழிப்பதற்காகச் வந்து தங்கியிருந்துள்ளார்.

கடந்த மே 14ஆம் திகதிக்கு பின்னர்  சுவிஸில் இருக்கும் குடும்பத்தினரால் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், நேற்று முன்தினம் சனிக்கிழமை இது குறித்து மானிப்பாய் காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு விரைந்த காவற்துறையினர், வீட்டிலிருந்து கடுமையான தூர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

சடலத்தை மீட்ட காவற்துறையினர், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

எனினும், கமராரக்கள் சேதமாக்கப்படுவதற்கு முன்னரான பதிவுகளைக் காவற்துறையினர் ஆய்வு செய்தபோது, கடந்த 14ஆம் திகதி இரவு வேளையில் முகமூடி அணிந்த இருவர் சமையலறை வழியாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் கண்காணிப்புக் கமராரக்களை முழுமையாகச் செயலிழக்கச் செய்த பின்  கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

  உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்ட மற்றும் வெட்டப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கொலை செய்த பின்னர், வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை வெளிநாட்டு, உள்நாட்டுப் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இக்கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொலையாளிகளைக் கைது செய்வதற்காக மானிப்பாய் காவற்துறையினரின் வழிகாட்டுதலில், விசேட காவற்துறைப் பிரிவினர் களமிறக்கப்பட்டுத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US