சுவிஸில் அறிமுகம் செய்யப்பட்ட சுப்பர் கம்பியூட்டர்
சுவிட்சர்லாந்தில் அதி நவீன புதிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார அமைச்சர் கய் பார்மெலின் இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
தேசிய சுப்பர் கம்ப்யூட்டிங் நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டருக்கு அல்ப்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது.
சாதாரண லேப்டாப் ஒன்றினால் 40 ஆண்டுகள் செய்யக்கூடிய கணக்கீடுகளை இந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஒரே நாளில் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
உலகின் சக்தி வாய்ந்த திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரின் வரிசையில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஆறாம் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காலநிலை எதிர்வு கூறல்கள் போன்ற தேவைகளுக்கு இந்த சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு துறையிலும் இந்த சுப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.