சுவிஸில் தற்கொலைக்கு முயன்ற யாழ்ப்பாண குடும்பப் பெண்! வெளியான பின்னணி தகவல்
சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சுவிஸ் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவருக்கு குறிப்பட்ட தொகைப் பணம் கொடுத்ததாகவும் அவர் ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த குடும்பப் பெண் சீட்டுப் பிடித்து வந்ததாகவும் சீட்டு முதலாளியான இன்னொரு தமிழர் குறித்த பெண்ணின் 60 ஆயிரம் பிராங் பணம் மற்றும் வேறு சிலரின் பணத்துடன் ஜேர்மனிக்கு தப்பிவிட்டதாகவும் தெரியவருகின்றது.
மேலும், சுவிஸ்லாந்தில் சீட்டுப்பிடிப்பது சட்டவிரோத செயல் என்பதால் இதற்கு வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதுடன் சீட்டுப்பிடித்தால் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.