வேலைக்கு திரும்புவதற்காக 10000 பிராங்க் செலவிட்டு நாடு திரும்பிய சுவிஸ் பிரஜை
சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவர் வேலைக்கு திரும்பும் நோக்கில் பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகள் செலவிட்டு நாடு திரும்பியுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கிப் பயணம் செய்த விமானமொன்று, பயணி ஒருவரின் மருத்துவ அவசர நிலைமையினால் கஸகஸ்தானில் தரையிறக்கப்பட்டது.
கஸகஸ்தானின் அஸ்தானா விமான நிலையத்தில் இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசர நிலைமையினால் இவ்வாறு விமானம் அவசராமக தரையிறக்கப்பட்டது.
சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் தரையிறக்கப்பட்ட போது ஓடுபாதையிலிருந்து விலகி புற்தரையில் விமானத்தின் சில்லு சிக்கியிருந்தது.
இவ்வாறான ஓர் பின்னணியில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய பெண் ஒருவர் பத்தாயிரம் சுவிஸ் பிராங்குகளை செலுத்தி நாடு திரும்பியுள்ளார்.
உரிய நேரத்தில் பணிக்கு திரும்பிய பெண் இவ்வாறு பாரியளவில் செலவிட்டு நாடு திரும்பியுள்ளார்.
சில பயணிகள் வியன்னா நோக்கி பயணித்து பின்னர் அங்கிருந்து சூரிச் நோக்கிப் பயணித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.