தாய்வானில் இராணுவ செலவினங்களை அதிகரிக்க திட்டமிட்டம்
மாறிவரும் சர்வதேச சூழ்நிலை மற்றும் எதிரிகளிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதன் காரணமாக இராணுவ செலவினங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் வெலிங்டன் கூ அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் எதுவும் வெளியிடவில்லை என்றாலும் ஜனாதிபதி வில்லியம் லாய் சிங்-டே சட்ட விரோத அச்சுறுத்தல் மற்றும் அவசரக் கால நிலையைக் கருத்தில் கொண்டு பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தாய்வான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.45 சதவிகிதத்தை இராணுவ செலவீனங்களுக்காக பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக தாய்வான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.