அமெரிக்க ஆயுதங்களையும் கைப்பற்றிய தலிபான்கள்!
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமான நிலையில் ஆப்கானிஸ்தானில் , அமெரிக்கா மறைத்து வைத்திருந்த பல ஆயுதங்களையும் தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள்.
வழமையாக பிஜாமா அணிந்து முஸ்லீம் வழக்கபடி உடைகளை அணிந்து இருந்த தலிபான்கள், தற்போது முதல் முறையாக குண்டு துளைக்காத அமெரிக்க ஆர்மியின் ஆடைகளை அணிந்துள்ளனர்.
அதோடு, இரவு நேர பார்வை சாதனம் அடங்கிய ஹெல்மெட், மற்றும் M4 அதி நவீன ரக துப்பாக்கிகளோடு வலம் வருகிறார்கள். அவர்கள் கைகளில் தற்போது அமெரிக்க ஆயுதங்கள் இருக்கிறது.
இனி முழுமையாக தற்கொலை குண்டுதாரிகளை தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமான வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை அதிபர் ஜோ பிடன் அமெரிக்க துருப்புக்களை திரும்ப பெற்றதே தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் விழக் காரணமாக இருந்ததாக பிரித்தானியா உள்ளிட்ட உலகநாடுகள் பலவும் அமெரிக்கா மீது பெரும் அதிருப்தியில் உள்ளன.