உத்தேச சமாதான ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்க - ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை

Sahana
Report this article
உக்ரேனில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையே உத்தேச சமாதான ஒப்பந்தம் குறித்து சவுதி அரேபியாவில் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன.
இந்தநிலையில் உக்ரேனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பிறிதொரு சமாதான பேச்சு வார்த்தைகள் புரிந்துணர்வுடன் இடம்பெறுவதாக உக்ரேனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சு வார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ரஷ்யா தொடர்ந்தும் ஆளில்லா வானூர்தி மூலம் வான் தாக்குதலை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் ரஷ்ய கிவ்வை குறிவைத்து மேற்கொண்ட வான் தாக்குதலில் 5 வயதான சிறார் ஒருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரேனின் பதில் தாக்குதலில் 4 இராணுவ உலங்கு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக உக்ரேனிய இராணுவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.