தூதரக உரையாடல்கள் தனிப்பட்ட முறையில் நடப்பதுதான் நல்லது: கனடா அமைச்சர்
கனேடியர் ஒருவர், கனடா மண்ணில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என வெளிப்படையாக, கனடா நாடாளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதைத் தொடர்ந்துதான் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவு பாதிக்கப்பட்டது.
இப்போது, தூதரக உரையாடல்கள் தனிப்பட்ட முறையில் நடப்பதுதான் நல்லது என்று கூறியுள்ளார் கனடா அமைச்சர் ஒருவர்.
ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கனேடிய தூதரக அதிகாரிகள் சுமார் 40 பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியா, கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற வலியுறுத்தியுள்ளதுபோல், கனடாவும் இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேறச் சொல்லுமா என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த ட்ரூடோ, நாம் பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பவில்லை, நான் முன்பே கூறியதுபோல, இந்த கடினமான நேரத்திலும், இந்தியாவுடனான ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வதற்காக நம்மாலான பணிகளை மேற்கொள்வதைத்தான் நாம் செய்யப்போகிறோம் என்றார்.
இதே விடயம் குறித்து பேசிய கனேடிய வெளியுறவு அமைச்சரான Melanie Jolyயும், இந்தியாவுடனான வலிமையான தூதரக உறவையே கனடா விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தாங்கள் இந்திய அரசுடன் தொடர்பிலிருப்பதாகவும், கனேடிய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை சீரியஸாக எடுத்துக்கொள்வதாகவும், தனிப்பட்ட முறையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
தூதரக உரையாடல்கள் தனிப்பட்ட முறையில் நிகழ்வதுதான் சிறந்தது என கனடா கருதுவதாகவும் தெரிவித்துள்ளார் அவர். வெளிப்படையாக நட்பு நாடொன்றைக் குறித்து குற்றம் சாட்டாமல், தூதரக அடிப்படையில், அமைதியாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தால், இப்படி இரு நாடுகளுக்கிடையிலான உறவிலும் எந்த பாதிப்புமே ஏற்பட்டிருக்காது.
அதை விட்டுவிட்டு, கனடா பிரதமர் வெளிப்படையாக இந்தியா மீது குற்றம் சாட்டியதுதான் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பாதிக்கவே காரணம். ஆக, கனடாஅமைச்சருக்கு காலம் கடந்தாவது ஞானம் பிறந்திருந்தாலும், அதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேம்படுமானால், இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சியே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |