மகனை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம்; அவுஸ்திரேலியப் பிரதமரிடம் தமிழ்த் தாய் விடுத்த கோரிக்கை
தமது மகன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸிடம் தமிழ்த் தாய் ஒருவர் இக் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீட்டா அருள் ரூபன் எனப்படும் குறித்த பெண் இலங்கையிலிருந்து 2012 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்று தற்காலிக பாதுகாப்பு விசாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் மறுப்பு
இதனையடுத்து அவர் தமது மகனை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்த நிலையில் அவரது விண்ணப்பத்தை அந்த நாட்டு குடிவரவுத் துறை 2016ம் ஆண்டு மறுத்துள்ளது.
அவர் விமானம் மூலம் அவுஸ்திரேலியா சென்ற நிலையில் மெல்போர்ன் நகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அவுஸ்திரேலிய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.