மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான வரிவிதிப்பு ஏப்ரல் 2 வரை ஒத்திவைப்பு
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான வரிவிதிப்பு ஏப்ரல் 2 வரை ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, வரிவிதிப்பு நடவடிக்கையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இதன்படி கடந்த 4ஆம் திகதி மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை அமலுக்கு வந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம், கார் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரிவிதிப்பு நடவடிக்கை ஏப்ரல் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான நிர்வாக கோப்புகளில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.