பாடசாலைக்குள் சிறுமியை குத்திக்கொன்ற ஆசிரியை ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தென்கொரியாவின் டிஜோன் நகரில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மியோக் ஜெ வான் (வயது 48) என்பவர் ஆசிரியையாக செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, கடந்த பிப்ரவரி 10ம் தேதி பள்ளியில் படித்து வந்த கிம் ஹா நியுல் என்ற 8 வயது சிறுமியை ஆசிரியை மியோக் ஜெ வான் பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
பின்னர், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த சக ஆசிரியைகள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமி கிம் ஹா நியுல் உயிரிழந்த நிலையில் ஆசிரியை மியோக் ஜெ வான் உயிர் பிழைத்தார். இதையடுத்து, மியோக் ஜெ வானை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மன அழுத்தத்தில் இருந்த ஆசிரியை மியோக் சிறுமி கிம் ஹா நியுலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மியோக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது வழக்கு விசாரனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சிறுமியை கொலை செய்த மியோக் மீதான வழக்கு தென்கொரிய கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில், சிறுமி கிம் ஹா நியுலை ஆசிரியை மியோக் குத்திக்கொலை செய்தது உறுதியான நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதேவேளை, மியோக்கிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.