கனடாவில் பொலிஸாரை மிரட்டிய சிறுவன் கைது
கனடாவின் மொன்ரியல் நகரத்தின் தெற்குக் கரை பகுதியில், பொலிஸாரை மிரட்டிய சிறுவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு இளைஞரின் மரணத்தின்பின்னர் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ப்ரோசார்டில் (Brossard) பொலிஸாரிானல் சுட்டுக் கொல்லப்பட்ட நூரான் ரெசாயி சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
15 வயதான சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சிறுவன் பின்னர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அல்லது பொதுமக்கள் மீதான மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசேட கரிசனையுடன் கண்காணிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இணைய வழியில் மிரட்டல் விடுக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.