டொரொண்டோவில் பயணிகள் நிறைந்த பேருந்தில் பட்டாசு வெடித்த இளைஞர்கள்
கனடாவின் டொரொண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் பயணிகள் நிறைந்த ரீ.ரீ.சீ TTC பேருந்துக்குள் ஒரு இளைஞர் குழு பட்டாசுகளை வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தற்போது பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில், கிங்ஸ்டன் வீதி மற்றும் விக்டோரியா பார்க் அவென்யூ பகுதியிலுள்ள பயணித்த பேருந்தில், முகத்தை மறைத்துக் கொண்டு கறுப்பு ஆடைகள்அணிந்திருந்த இளைஞர்கள் சிலர் ஏறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களே பேருந்துக்குள் பட்டாசுகளை வெடித்து, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் இரு பெரியவர்கள் மருத்துவ உதவி பெற்றனர், ஆனால் எவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்று பராமரிப்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
ஆனால் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்காக பொலிஸார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
தகவல் உடையவர்கள் 416-808-4100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அழைக்கலாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.